Sunday 17 March 2013

AIPEU GDS NFPE சங்கத்தின் முதல் அகில இந்திய வெற்றி மாநாடு தமிழகத்தில் .............


 AIPEU-GDS(NFPE) சங்கத்தின் முதலாம் அகில 

இந்திய மாநாட்டிற்கு வருக 

வருக என இரு கரம் நீட்டி வரவேற்கிறது நம் 

தமிழ் மாநிலச் சங்கம் .
The1st All India Conference of AIPEU - GDS [NFPE]

The AIC will be held at "Comrade Adinarayana Nagar", Dharmaprakash Kalyana Mandapam, Purasawalkam, Chennai - 600084 from 21-22 March, 2013

Hon'ble Member of Parliament Comrade Basudev Acharya will inagurate the AIC on 21/03/2013

NFPE and its Affiliated Organisations will be represented by the respective Chief Executives and CHQ Office Bearers as printed in the invitation.
மேலே கண்ட வரவேற்பு மடல் உங்களுக்கு அளிக்கப் படுகிறது. 
வரவேற்புக் குழுவின் தலைவர் மற்றும் பொதுச் செயலர் ஆகிய இருவர் சார்பாகவும் , தமிழ் மாநில AIPEU  GDS (NFPE ) சங்கத்தின் சார்பாகவும் உங்கள் அனைவரையும் மீண்டும்  ஒருமுறை இருகரம் கூப்பி வருக வருக என மாநாட்டிற்கு வரவேற்கிறோம். !
தோழமையுடன் 
R . தனராஜ், , மாநிலச் செயலர்.

Friday 1 March 2013

கிழிந்தது மகாதேவையா முகமூடி ....

இதற்குத்தான் ஆசைப் பட்டாயா மகாதேவையா ? 

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் NFPE  பேரியக்கம் எந்த ஒரு அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப் பட்ட தொழிற்  சங்கத்துடன்  தோன்றிய நாள் முதலே  இன்று வரை இணைக்கப் படவில்லை என்று .

பல்வேறு அரசியல் கருத்தோட்டமுள்ள தலைவர்கள் ,  1954 முதலே  பல்வேறு  கால கட்டங்களில்  NFPTE  இயக்கத்தில் முன்னணித் தலைவர்களாக இருந்தபோதும்  அவர்களெல்லாம்  தங்களின் தனிப்பட்ட அரசியல்  கருத்து என்பது வேறு - NFPTE  இயக்கம் என்பது வேறு  என்றே  நினைத்தார்கள் . உதாரணமாக  தோழர்  மோசா , தோழர்  குப்தா , தோழர்  பிரேம் , தோழர் L .A .P ., தோழர் A .S . ராஜன்,  தோழர். K .G . போஸ் , தோழர். ஆதி , தோழர். N .C .A . ஆகியோரை  நாம் பார்க்கலாம் . 

தற்போது கூட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாநிலக் கட்சிகளின் கருத்தோட்டமுள்ள  தலைவர்கள் NFPE யில்   தலைமைப் பொறுப்பில் உள்ளது முன்னணித் தோழர்களுக்கு தெரியும் . பல்வேறுபட்ட  கருத்தோட்டமுள்ள  லட்சக் கணக்கான உறுப்பினர்களை உள்ளடக்கிய பேரியக்கம் தான் முந்தைய NFPTE - தற்போதைய  NFPE  ஆகும் . இதன் வலிமையே வேற்றுமையில் - ஒற்றுமை  என்பதுதானே ! 

அதனால் தான் இன்றுவரை அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக NFPE  இருந்து வருவதும் உண்மை.  60 ஆண்டுகள் இந்திய தேசத்தை ஆண்ட  காங்கிரஸ்  கட்சி கூட தன்னுடைய  INTUC  இன் இணைப்பு சங்கமாக FNPO வை   உற்பத்தி செய்தும் , இன்று வரை கூட குறைந்த பட்சம் 15% உறுப்பினர்களை GDS சங்கத்தில் பெற முடிய வில்லை . 

மூன்று முறை மத்தியில் ஆட்சியை பல்வேறு கூட்டணி வாயிலாகப் பிடித்தும் கூட- இந்தியாவின் மிகப் பெரிய கட்சியான   பாரதீய ஜனதாக் கட்சியால் தன்னுடைய BMS  சங்கத்தின் அங்கமான BPEF  க்கு இன்றுவரை கூட குறைந்த பட்சம் 5%  உறுப்பினர்களைப் பெறமுடிய வில்லை .

ஆனால் , இதுவரை  எந்த ஒரு தலைவரும் அவரவர்களுக்கு பிடித்த அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப் பட்ட தொழிற் சங்கத்தில் NFPE  பேரியக்கத்தை  இணைக்க வேண்டும் என்று  எண்ணியதுமில்லை --  அதற்கு எவரும்  துணிந்ததும் இல்லை .

இன்றோ........  நேற்று வந்த  மகாதேவையா  துணிந்து விட்டார் . 

லட்சக் கணக்கான  GDS  ஊழியர்களின்  தியாகத்தால் உருவான,   இலாக்காவால் அங்கீகரிக்கப் பட்ட மிகப் பெரும்  AIPEDEU  சங்கத்தை ...  நம்மால் உருவாக்கப் பட்ட GDS  சங்கத்தை ,  நம்மில் யாரிடமும் கேட்காமலேயே  இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின்  அங்கீகரிக்கப் பட்ட  தொழிற் சங்கமான  AITUC  யில்  இணைத்துவிட்டார்  என்பது  மிகப் பெரும் அதிர்ச்சியூட்டும் செய்தியாகும் . செயற்குழுவைக் கூட்டாமலேயே , பொதுக் குழுவைக் கூட்டாமலேயே  தன்னிச்சையாக  முடிவெடுத்து இணைத்து விட்டார். 

AITUC  இன் 40 ஆவது  பொதுக் குழு கூட்டம்  கடந்த ஜனவரி மாதம்  6 மற்றும் 7 தேதிகளில் கல்கத்தா நகரில் நடைபெற்றது. அதன் நிகழ்வுகளையும்  AITUC  இல் இணைக்கப்பட்ட சங்கங்களின்  பொதுச் செயலர்களையும்   பொதுக் குழு உறுப்பினர்களாக அறிவித்து ,   AITUC  இன் பத்திரிக்கையான  ' TRADE  UNION  RECORD' பிரசுரித்துள்ளது . அதன் நகலை கீழே அளித்துள்ளோம். 

இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின்  தோழர். தா. பாண்டியன் , K . சுப்பராயன் , S .S . தியாகராஜன்,   குருதாஸ் தாஸ் குப்தா,  A .B . பரதன்  ஆகியோர் பெயர்களுடன்  பொதுக் குழு உறுப்பினராக  தோழர். S .S . மகாதேவையா  பெயரும் பிரசுரிக்கப் பட்டுள்ளது . இணைக்கப் பட்ட FEDERATIONS  பட்டியலில் அதன் பொறுப் பாளராக ' மகாதேவையா'  பெயர் வந்துள்ளது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .  

இப்படி  'தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன்' என  மகாதேவையாவுக்கு பிடித்த அரசியல் கட்சியுடன் நம்மை இணைத்திடவா  நாம் செந்நீர் சிந்தி இந்த சங்கத்தை வளர்த்தோம் !   காலம் காலமாக  கட்சி சார்பற்ற சங்கம் என்று நாம் கூறி ஊழியர்களை ஒன்று படுத்தி  வைத்திருந்த நிலையை இன்று  மகாதேவையா வேறுபடுத்தி விட்டதை  இன்னும்  ஏற்கத்தான் போகிறார்களா  அங்கிருப்போர் ?

இப்படியே போனால்  AIPEDEU  வின்  உத்திர பிரதேச  மாநிலச் செயலர்  சமாஜ் வாடி கட்சியுடன்  அந்த மாநிலச் சங்கத்தை இணைப்பார் .... ஒரிஸ்ஸாவில்  உள்ள AIPEDEU  மாநிலச் செயலர்  பிஜு  ஜனதா  தளத்துடன்  அந்த மாநிலச் சங்கத்தை இணைப்பார் .  பீகாரில்   நிதிஷ் குமாரின்  ஐக்கிய ஜனதா தளத்துடன் அந்த மாநில AIPEDEU  இணைக்கப் படும். தமிழகம் மட்டும் சளைத்ததா என்ன  என்று கூறி  இங்குள்ள 'ஜாம்பவான்கள்'   தி. மு.க. வின்  PEPU  சங்கத்தில்  இங்குள்ள AIPEDEU  சங்கத்தை  இணைப் பார்கள் .

இப்படியே போனால்  என்னாகும் ? அரசியல்  கட்சிகளின் அடி வருடிகளைத்தான் நாம் பார்க்க முடியும் ....   நம்  தலைவர்களின் தியாகத்தால் வளர்ந்த சங்கம் சிதையுண்டு போகும்.  இதனை ஏற்பீர்களா தோழர்களே ? அல்லது 

 மகாதேவையாவைத் தூக்கி எறிந்துவிட்டு  ... NFPE  பதாகையை உயர்த்திப் பிடிப்பீர்களா ?  இன்னமும் AIPEDEU  சங்கத்தை நம்பியுள்ள சாதாரண அடிமட்டத் தோழர்களே !  அதனை ஆதரிக்கும் தோழர்களே ! இந்தக் கேள்விகளை எல்லாம்  உங்கள் சிந்தனைக்கே விடுகிறோம்! 

இனியும் காலம் தாழ்த்தாது AIPEDEU  சங்கத்தில் இருந்து விலகிடுவீர் !
NFPE  பேரியக்கத்தின் அங்கமான  AIPEU  GDS (NFPE )  இல்  உடன் இணைந்திடுவீர் !

வாருங்கள் தோழர்களே !  
கரம் ஒன்று  சேர்ப்போம் ! 
களம் இனி ஒன்றாய் காணுவோம் !

தோழமையுடன் 
R . தனராஜ் , மாநிலச் செயலர்.

குறிப்பு:- இதனை நகல் எடுத்து அந்தந்த கிளைகளில்  உள்ள அனைத்து GDS  தோழர்களுக்கும் வழங்கிட அன்புடன் வேண்டுகின்றோம்.